உள்ளடக்கத்துக்குச் செல்

வட ஆற்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட ஆற்காடு மாவட்டம்
மாவட்டம் மதராஸ் மாகாணம்

1855–1989 [[திருவண்ணாமலை மாவட்டம்|]]
 
[[வேலூர் மாவட்டம்,|]]

Flag of வட ஆற்காடு மாவட்டம்

கொடி

Location of வட ஆற்காடு மாவட்டம்
Location of வட ஆற்காடு மாவட்டம்
வட ஆற்காடு மாவட்டம் அமைந்துள்ள இடம் மற்றும் வருடம் 1956
தலைநகரம் சித்தூர் (1855 - 1911), வேலூர் (1911- 1959), ஆற்காடு (1959-1989)
வரலாறு
 •  ஆற்காடு மாநிலத்தின் இணைப்பு 1855
 •  வட ஆற்காடு மாவட்டத்தை திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் ஆக பிரிக்கப்பட்டது. 1989
பரப்பு
 •  1901 19,129.7 km2 (7,386 sq mi)
Population
 •  1901 22,07,712 
மக்கள்தொகை அடர்த்தி 115.4 /km2  (298.9 /sq mi)
The Imperial Gazetteer of India, Vol. 5

வட ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் (ஜில்லா) ஆகும்.[1][2]

சித்தூர் மாவட்டம் (மதராஸ் மாகாணம்)

[தொகு]

முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801-ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1901-ஆம் ஆண்டு சித்தூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டு வந்த போது வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, போளூர், வந்தவாசி, குடியாத்தம், வாலாஜா ஆகிய வட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

வட ஆற்காடு மாவட்டத்தின் வட்டங்கள்

[தொகு]

1911 வட ஆற்காடு ஜில்லாவில் இருந்து சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு எல்லைகளை மறுசீரமைத்து வேலூரை தலைமையிடமாகக் கொண்டு பழைய வட்டங்களைக் கொண்டும் மற்றும் புதிய வட்டங்களை உருவாக்கியும் வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டது. அதாவது, ஆற்காடு, வேலூர், வாலாஜா, ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம், குடியாத்தம், அரக்கோணம், திருப்பத்தூர், ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி வருவாய் கோட்டங்களான திருவோத்தூர் - ஆரணி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் 1959 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக உருவாக்கி செயல்பட்டு வந்தது. மீண்டும் 1989-இல் வட ஆற்காடு மாவட்டமானது வட ஆற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று: திருவண்ணாமலை மாவட்டம் ) வட ஆற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:வேலூர் மாவட்டம்) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மேலும் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்தை ஆகஸ்டு 15 2019-ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Imperial Gazetteer of India. Vol. 5: Abazai to Arcot. New edition. Clarendon Press, Oxford 1908, p. 408
  2. Census of India, 1991: District census handbook, Controller of Publications, 1994, p. 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_ஆற்காடு&oldid=4102757" இலிருந்து மீள்விக்கப்பட்டது